Quantcast
Channel: என்னை பாதித்தவை!!
Viewing all articles
Browse latest Browse all 25

நாடு நல்ல நாடு - நோர்வே 4

$
0
0
நோர்வே - 4!

நோர்வே நாடானதுஉலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும் :) ).




ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice age) முடிவில் ஏற்படுத்தப்பட்ட உருகும் பனிநிலைகள் (glaciers), கடல்நீரேரிகள் (fjords), நீர்வீழ்ச்சிகள் (waterfalls) போன்ற இயற்கை தன் அழகை காட்டி நிற்கும் இடங்கள் தன் வசப்படுத்தி உள்ளதால், மக்கள் வாழும் நிலப் பரப்பின் அளவு குறைவாகவே உள்ளது. மலைகள், உருகும் பனிப்பாறைகள், கடல் நீரேரிகள் என்பவற்றின் அழகே அழகு.



Glaciers:பனிப்பாறைகளில் மலையேற்றம் செய்பவர்களைப் பாருங்கள்.





Fjords:கடல் நீரேரிகளின் அழகைப் பாருங்கள். இந்த கடல் நீரேரிகளின் ஊடாக கப்பலில் செல்வது எத்தனை இனிய அனுபவம்.




நோர்வேயின் கரையோரப் பகுதிகளில், உள் நோக்கி இழுக்கப்பட்ட கடல்நீரேரிகளின் கரை, சிறு தீவுகளின் கரை என்று பார்த்தால், அவற்றை நீட்டி ஒரு கயிறு மாதிரி இழுத்தால் கரையின் நீளம் 25,000 km வரை வரும்.

நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள இடங்களில் சில (கிட்டத்தட்ட வடக்கில் மூன்றில் ஒரு பகுதி) ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்திருக்கிறது.




அதனால் குளிர் மிக அதிகமாக இருப்பதுடன், அழகான நடு இரவுச் சூரியனைக் காணக் கூடியதாகவும் இருக்கிறது.'நடு இரவுச் சூரிய நாடு' என்ற பெருமையை அடைகின்றது.

Midnight sun:நடு இரவில் இப்படி சூரியனைப் பார்த்தால் எத்தனை மகிழ்வாக இருக்கும்.

இன்னும் ஒரு அழகு வடதுருவ ஒளி (Northern Light) தெரிவது. வட துருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு ஒளியின் அபூர்வத் தோற்றமே இந்த வடதுருவ ஒளி எனப்படுவது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித் தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். இதை இயற்கையின் வாணவேடிக்கை என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாக, கற்பனையால் மெருகூட்டிச் சொல்லலாம். இந்த அழகை நேரில் பார்ப்பவர்கள், இந்த அழகை வார்த்தைகளால் விபரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள். நான் பார்க்கவில்லை. :(





நான் வாழும் பேர்கன் (Bergen)நகரம் பற்றியும் சொல்லி விடுகின்றேன். நோர்வேயின் தலை நகரம் ஒஸ்லோ விற்கு அடுத்ததாக பெரிய நகரம் பேர்கன் நகரம். மிகவும் அழகான இடமும் இதுவாக இருப்பதால், உல்லாசப் பயணிகளுக்கு (வெளி நாட்டுக்கு, உள்நாட்டுக்கு) உகந்த இடமாக அமைந்திருக்கிறது. இது பழைய தலை நகரமாகவும் இருந்திருக்கிறது.


இந்த நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன் கடல் நீரேரிகளுக்கான வாசலாகவும் (Gateway to fjords) அமைந்துள்ளது. ஒரு மலையில் ஏறி, மலையேற்றம் மூலம் நடந்தே அனைத்து மலைகளையும் கடந்து வருவது பேர்கன் வாழ் மக்களில் பலரின் சிறந்த பொழுது போக்கு. மலையேற விருப்பமில்லாதவர்கள் வாகனத்திலும் போகலாம். ஒரு மலைக்கு cable bus வசதியும், இன்னொரு மலைக்கு cable car வசதியும் உண்டு.




பேர்கனைப் பற்றிய இன்னொரு தகவல். அந்த நகரத்தை 'குடையுடன் கூடிய நகரம் (Byen med paraply)' என்று செல்லமாக அழைப்பார்கள். காரணம் ஐரோப்பிய நகரங்களில் அதிக மழை பெய்யும் நகரம் இதுவே. ஒரு வருடத்தில் அதி குறைந்ததாக 200 நாட்கள் மழை பெய்யும். அதனால் நகரம் எப்போதும் குளித்து மிகவும் சுத்தமாக இருக்கும். :). சில நாட்கள் மழை தொடர்ந்து இலாவிட்டால் பேர்கன் வாழ் மக்களுக்கு கவலை வந்து விடும். இதைபார்த்தால் பேர்கனில் பெய்யும் மழை நிலவரம் தெரிய வரும். பேர்கன் இத்தனை அழகான நகரமாக இருந்தும் பலர் இங்கு வந்து வாழ்வதில் விருப்பம் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இந்த மழையின் அளவுதான். :(

நோர்வேயின் அழகை வர்ணித்தாயிற்று. அடுத்த பதிவில் இன்னும் சில விடயங்களை சொல்லி விட்டு நிறைவு செய்து விடலாம் என்றிருக்கிறேன்.

Viewing all articles
Browse latest Browse all 25

Latest Images

Trending Articles


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 25


நன்மைகளை அள்ளி தரும் அஷ்டாசர மந்திரம்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


சமகாலத்துகுரிய நீதிக்கதையொன்று - ரஜ்னி பக்ஷி


பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளனும்...மோடியிடம் சொன்ன ட்ரம்ப்


சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களால் பத்திர பதிவு டோக்கனில் மோசடி:...


The Beekeeper (2024) Tamil Dubbed Movie HD 720p Watch Online


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்


கணக்கு எல்லாம் சரியா எழுதி வச்சுட்டுத்தான் அப்பல்லோ போயிருக்கார்............